அனைத்து அரசு/ அரசு நிதியுதவி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குசாவடிமையங்களாக செயல்பட உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்தல் விதிகளின்படி 28 வகையான வசதிகள் ஏற்பாடு செய்யும் பொருட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களால் வாக்கு சாவடி மையங்களில் பணிகள் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி வாக்குசாவடி மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடி மையத்தினை திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்