ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் - Asiriyar.Net

Tuesday, March 16, 2021

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

 






9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடந்துவரும் நிலையில்,  மார்ச் மாதத்துடன் பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில்,  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.


ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.




ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதையடுத்து கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில்  கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது .





இதனிடையே வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடைபெறும். அதேபோல் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் ஏப்.1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.





இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான வகுப்புகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கற்றல்- கற்பித்தல் பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டு வருகின்றனர்.



9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. இது குறித்து பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நம்ப வேண்டாம்.இந்த வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், என்றனர்.


Post Top Ad