மன்னார்குடி யில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாண விகள் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 'இருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 6-ம் தேதி கரோனா தொற்று இருப் பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள் அனைவரும் சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி இதையடுத்து, பள்ளியில் பயி லும் சக மாணவிகள் மற்றும் ஆசி ரியர்கள் என 300 பேருக்கு கடந்த 8-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள் ளது நேற்று தெரியவந்தது.
இதையடுத்து, 11 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப் பட்டுள்ளனர். இதனால், அப்பள்ளியில் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள் எது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள் ளார்.
No comments:
Post a Comment