ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, January 6, 2021

ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு

 






தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.





இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது குறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad