மிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கடந்த, 2013, 2017ல் நடந்த டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடம் நிரப்பப்படும். கூடுதல் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப்பின், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment