தைப்பூசம் என்பது தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு உரிய விசேஷ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் ஜோதி சொரூபமாக காட்சியளிக்கும் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோதிட அறிவியல் ரீதியாக இந்த நாளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. ஜோதிட அறிவியலைப் பொறுத்தவரை உணவு, விவசாயம், நீர்வளம் ஆகியவற்றை வழங்கும் கோள் சந்திரன். கடும் வெயிலால் அதிக வெப்பமோ அல்லது அதிக மழையால் வெள்ளமோ இன்றி விவசாயத்திற்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலையை தை மாதத்தில் காண்கிறோம்.
முழு நிலவாக ஒளிவீசும் பௌர்ணமி நாள் தை மாதத்தில் வரும்போது மட்டுமே தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதுவே தைப்பூசத் திருநாள் ஆகவும் கொண்டாடப்படுகிறது. பௌர்ணமியுடன் கூடிய தைப்பூச நாளன்று ஆங்காங்கே அன்னதானம் நடைபெறுவதைக் காண்கிறோம். சந்திரனுக்கு உகந்த அந்த நாளன்று அன்னதானம் செய்வோருக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாழ்வினில் வளம் பெருகும்