குடியரசு தினத்தையொட்டி, திருநங்கையை தேசிய கொடியேற்ற வைத்து கவுரவித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருச்சி, தென்னூரில், சுப்பையா நினைவு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு அம்சங்களுடன் நடந்த விழாவில், திருச்சியைச் சேர்ந்த திருநங்கை சினேகா, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
திருநங்கை சினேகா, திருச்சி ஊரக வாழ்வாதார இயக்கத்தில், தற்காலிக ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார்.தேசிய கொடியேற்றி சினேகா பேசுகையில், ''ஆசிரியர்கள், அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்குபவர்கள். லட்சியத்தில் உறுதியாக இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
''எங்களை போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட கவுரவம் கிடைப்பது, நாங்கள் தன்னம்பிக்கையுடன் மென்மேலும் உயர வழிவகுக்கும்,'' என்றார். குடியரசு தின விழாவில், திருநங்கையை தேசிய கொடி ஏற்ற வைத்த, பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் மற்றும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டினர்
No comments:
Post a Comment