ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings - Asiriyar.Net

Saturday, January 23, 2021

ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings

 




The Regional Institute of English , South India ( RIESI ) மூலமாக , ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 15.02.2021 முதல் 16.03.2021 வரை 30 நாட்கள் பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் , இப்பயிற்சிக்கு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 



எனவே , மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் , தொடக்கப்பள்ளி நிலையில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை ( ஏற்கனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் ) ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்து , RIESI Bangalore- லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ( இணைக்கப்பட்டுள்ளது ) 


விதிமுறைகளைப் பின்பற்றி , ( சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விருப்பக் கடிதத்துடன் ) தேர்ந்தெடுத்து கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ( MS - Excel Format- ல் ) deesection.exmail.com என்ற மின்னஞ்சலுக்கு 29.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






Post Top Ad