TET - ஆசிரியர் தேர்வு அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவுப்பு - Asiriyar.Net

Friday, January 22, 2021

TET - ஆசிரியர் தேர்வு அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவுப்பு

 






ஆசிரியர் தேர்வு அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோட்டில், அவர் அளித்த பேட்டி:புதிய பாடத்திட்டம், மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை பட்டியலிட்டு, விரைவில் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.



கடந்த, 2013, 2017ல் நடந்த டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடம் நிரப்பப்படும். கூடுதல் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப்பின், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.



அதுபோல, அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விபரம் பெறப்பட்டு, தேவையான பணியாளர் நியமிக்கப்படுவர். மத்திய அரசு, 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அந்நிதியில், அரசு மாணவியர் பள்ளிகளில் கூடுதலாக தலா ஒரு யூனிட் அளவில் கழிப்பறை கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



Post Top Ad