ஒரு தனி திகில் அனுபவம் சிக்னளுக்கு சிக்கனல் காத்துக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர்கள் அனைவருக்கும் நிச்சயம் இந்தத் திகில் அனுபவம் இருந்திருக்கும், அதுவும் நம் காவல் துறை நண்பர்களை சிக்னல்களில் பார்க்கும் பொது வரும் திகில் அனுபவத்திற்கு நிகர் வேறு எதுவுமே இருந்திருக்காது என்றே கூறலாம். என்னதான் நம்மிடம் அனைத்துச் சான்றிதழ்களும் சரியாக இருந்தாலும்t கூட, சிக்னல் இல் அவர்களை நெருங்கும் பொது இன்னும் மனம் விட்டு விட்டுத் தான் துடிக்கிறது.
வாகன ஓட்டுனர்களுக்கு இன்றையே டிராபிக் இல் வண்டி ஓட்டுவதில் கூட பதற்றமில்லை. ஆனால் காவல் நண்பர்களிடம் சிக்கினால் சேதாரம் தான் என்ற மனநிலையே இங்கு நிலவுகிறது என்பது தான் உண்மை. வாகன ஓட்டுனர்களுக்கு தேவையான முக்கியமான சான்றிதழ்களில் ஒன்று டிரைவிங் லைசென்ஸ் தான். அதை எடுக்க ஏகப்பட்ட வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தாலே நாம் சோர்த்து விடுகிறோம். உங்கள் டிரைவிங் லைசென்ஸ் ஐ ஆன்லைன் இல் வாங்கும் வசதியைப் புதிதாக அறிமுகம் செய்து எளிதாக்கி உள்ளது போக்குவரத்துக்கு கழகம்.
ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
- முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
- வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் "சாரதி"(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள "டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்"(Driving Licence Related Service) கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- திரையின் இடது பக்கத்தில் "டிரைவிங் லைசென்ஸ்"(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.
- இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும்.
- புது கற்றுணர் உரிமம் (New Learner Licence)
- புது ஓட்டுனர் உரிமம் (New Driving Licence)
- ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)
என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.
முக்கிய குற்பிப்பு 1: உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம்.
முக்கிய குற்பிப்பு 2: உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுனர் உரிம சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் காணாமல்t போன ஓட்டுனர் உரிமத்தை டூப்ளிகேட் வாங்க இங்கேயே அப்ளை செய்துகொள்ளலாம்.
செயல்முறை
முதலில் உங்கள் கற்றுணர் உரிமம் சான்றிதழ் வாங்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
செயல்முறை 1:
- புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் இப்பொழுது வரும்.
- உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து.
- உங்கள் சேவையையும் தேர்வு செய்யுங்கள்.
செயல்முறை 2:
- இப்பொழுது உங்களுக்கான கற்றுணர் உரிமம் ஃபார்ம் தெரியும்.
- (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுணர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வுt செய்யுங்கள்
- இறுதியாக சப்மிட் கிளிக் செய்யுங்கள்.
ஃபார்ம் 1:
இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுணர் உரிமம் ஃபார்ம் இல் பதிவேற்றம் செய்யுங்கள்.
- மாநிலம்
- ஆர்.டி.ஓ ஆபீஸ்
- பிண்கோடு
- ஆதார் எண்
- பெறுனர் முழுப் பெயர்
- பாதுகாவலர் பெயர்
- பிறந்த நாள்
- இரத்த வகை விவரம்
- மொபைல் எண்
- தாற்காலிக எண்
- ஈமெயில் ஐடி
- அடையாள குறிப்பு
- நிரந்தர விலாசம்
- தற்காலிகt விலாசம்
- கியர் வாகனத்திற்கு கற்றுணர் உரிமம்
- கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுணர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள்.
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். இத்துடன் உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் இன்பாக்ஸ் இல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஃபார்ம் 2:
உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாள சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.
உங்கள்t பதிவேற்றம் சீராக நடந்தபின் உங்களுக்கான ஒப்புகை உறுதி செய்யப்படும்.
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழை பிரிண்ட் செய்யுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 ஐ பிரிண்ட் செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 எ பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
ஆர்.டி.ஓ ஆபீஸ்
உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி உங்கள் கற்றுணர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இதே வழிமுறை படி உங்களுக்கான புதிய ஓட்டுனர் உரிமம் மற்றும் காணாமல்t போன ஓட்டுனர் உரிமத்தை புதியதாய் வாங்கிக்கொள்ளலாம். இதே போல் பழைய ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பித்தும் கொள்ளலாம்.
ஹெல்மெட் அணிந்து சரியான சான்றிதழ்களுடன் இந்திய வாகன சட்டங்களை சரியாகப் பின்பற்றி, வாகனங்களைக் கவனமாக ஓட்டுங்கள் என்று காவல் நம்பர்கள் சார்பில் நாங்களும் கேட்டுக்கொள்கிறோம்.