Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, January 20, 2021

பள்ளி திறக்க 98 சதவீத பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 







:''தமிழகத்தில், 98 சதவீத பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒப்புதலுடன், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச், 24ல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. 10 மாத இடைவெளிக்கு பின், நேற்று, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மட்டும் துவக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியை, நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். ''சிறப்பான முறையில் கல்வி பயில வேண்டும்'' என, மாணவர்களை கேட்டுக் கொண்டார்.


அமைச்சர் கூறுகையில், ''மாநிலத்தில், 98 சதவீத பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம், 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 400 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

No comments:

Post a Comment

LightBlog