பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் கர்நாடகாவில் 52 ஆசிரியர்கள் 10 மாணவர்களுக்கு கரோனா - Asiriyar.Net

Thursday, January 7, 2021

பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் கர்நாடகாவில் 52 ஆசிரியர்கள் 10 மாணவர்களுக்கு கரோனா

 

கர்நாடகாவில் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.



கர்நாடக சுகாதாரத் துறைஅமைச்சர் கே.சுதாகர் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் அதிகளவில்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. பள்ளிகளை செயல்பட விடாமல் தடுப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். ஆனால் மாணவர்கள், கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் அதிகளவில் பள்ளிக்கு வருகின்றனர்.


இந்நிலையில், மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில்கடந்த சில தினங்களில் 52 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



பெலகாவியில் 22 ஆசிரியர்கள்,சித்ரதுர்கா, சிக்கமகளூரு, விஜயபுரா ஆகிய 3 மாவட்டங்களில் தலா 5 ஆசிரியர்களுக்கும் தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 26 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளுக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு 7 நாட்கள் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Post Top Ad