பள்ளிகள் திறக்கவில்லை; பாடங்களும் நடத்தவில்லை பொதுத்தேர்வுகளை நடத்துவது எப்படி சாத்தியம்? - Asiriyar.Net

Monday, January 4, 2021

பள்ளிகள் திறக்கவில்லை; பாடங்களும் நடத்தவில்லை பொதுத்தேர்வுகளை நடத்துவது எப்படி சாத்தியம்?

 






நடப்பு ஆண்டில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடுவோம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 



பள்ளிகள் பத்து மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. தனியார் பள்ளிகள் மட்டுமே ஆன்லைனில் பாடங்களை நடத்துகின்றன. செல்போன், இணையதள வசதி இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் பல மாணவர்கள் ஆன்லைன் பாடங்களை தவற விட்டு வருகின்றனர்.



அரசு பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை. பாடங்களை சரிவர நடத்தாமல் பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாடத்திட்டத்தை குறைக்கப்போவதாக அரசு அறிவித்து, இதற்காக குழு அமைத்தது. குழுவும் அறிக்கை தாக்கல் செய்துவிட்டது. 



ஆனால் இன்னும் இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை பாடத்திட்டத்தை  50 சதவீதம் குறைப்போம் என  அமைச்சர் செங்கோட்டையன்  என அறிவிக்கவும் செய்தார்.




பள்ளிகள் திறக்கப்படாமலும் பாடங்கள் நடத்தப்படாமலும் பொதுத்தேர்வை நடத்துவது எப்படி சாத்தியம் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர். உருமாறிய கொரோனா பரவி வரும் இச்சூழலில் பொதுத்தேர்வை நடத்துவதா என பெற்றோர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இத்துறை சார்ந்து நான்கு பேர் இங்கு அலசுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad