ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 15, 2023

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

 



கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் இன்று காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.


அப்போது, சோபியா த/பெ.வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு), தமிழரசி த/பெ. ராஜ்குமார் (8ம் வகுப்பு), இனியா த/பெ.மோகன்குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா  த/பெ. பெரியண்ணன் (6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 


உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




Post Top Ad