வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பெரும்பான்மையான தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுவதால் மாணவர்களுக்கான காலை உணவு அதிகாலை இலையே தயாரிக்க வேண்டியுள்ளது
அவ்வாறு தயாரிக்கப்படும் உணவு விடுமுறை அறிவிப்பு தாமதமாக அறிவிக்கப்பட்டால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பினை முன்கூட்டியே கணித்து அறிவிக்குமாறு அறிவுறுத்துள்ளது
No comments:
Post a Comment