வருமானம் ஈட்டும் தாய், தந்தை இல்லாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.5.94 கோடி மதிப்பிலான காப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவா்கள் நலன் கருதி தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கு ரூ.11 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 810 விண்ணப்பங்கள் கடந்த 1-ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பிலான காப்பீடு பத்திரம் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர மீதம் ரூ.5 கோடியே 23 லட்சம் நிதி உள்ளது. எனவே இந்த திட்டத்தின்கீழ் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள மாணவா்களின் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment