ஆசிரியர்களிடம் சாதி ரீதியாக சங்கங்கள் இருக்கலாமா? - Asiriyar.Net

Tuesday, October 14, 2025

ஆசிரியர்களிடம் சாதி ரீதியாக சங்கங்கள் இருக்கலாமா?

 



பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பல்வேறு சங்கங்கள் உள்ளன. அந்த வகையில், சில  பிரிவினரை சேர்த்து, சில சங்கங்களை உருவாக்கி உள்ளனர். அவை, 


நேரடியான ஆசிரியர் சங்கங்களாக இல்லாமல், அரசு அலுவலர் சங்கங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. அந்த சங்கங்கள், தங்கள் ஜாதி சார்ந்த ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காகவும், புகார்களுக்காகவும் வழக்கு தொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. 


இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக சங்கங்கள் என்றால், அவற்றை தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது வழக்கம். இதில், சமுதாயம், காலாசாரம், விளையாட்டு மேம்பாடு போன்ற நோக்கங்களுக்கான சங்கங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பொது விவகாரங்களுக்காக குடியிருப்போர் சங்கங்கள், கூட்டமைப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. 


ஆனால், பணியாளர் மற்றும் அலுவலர் சங்கங்களுக்கு, பொருளாதார மேம்பாடு நோக்கமாக இருப்பதால், சங்கங்கள் பதிவு சட்டத்தில் அவற்றை பதிவு செய்ய முடியாது. 


ஆனால், சாதி ரீதியாக பணியாளர், அலுவலர் சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், சில சங்கங்கள், பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த எண்ணை பயன்படுத்தி செயல்படுகின்றன. இந்த சங்கங்களுக்கு, தற்போதைய நிலவரப்படி முறையான பதிவு இல்லை. 


சங்கங்கள் ஜாதி பெயர்களை பயன்படுத்தலாமா என்பதை, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த பரிந்துரைகள் அமலாகுமா?

  பள்ளி பெயர்களில் உள்ள, 'கள்ளர் மறுவாழ்வு, ஆதி திராவிடர் நலம்' உள்ளிட்ட அடையாளங்களை நீக்கி, அரசு பள்ளி என மாற்றுவதுடன், பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்  நன்கொடையாளர் பெயரில் ஜாதியை குறிப்பிடக்கூடாது 


 உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களை, குறிப்பிட்ட காலத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. முக்கியமாக, பெரும்பான்மை ஜாதியினர் உள்ள பகுதிகளில், அதே ஜாதி ஆசிரியர்களையோ, அதிகாரிகளையோ பணியாற்ற அனுமதிக்கக்கூடாது 


 கல்வி உதவித் தொகைக்கான விபரங்கள் சேகரிக்கும் போது, தலைமை ஆசிரியர் அறைக்கு அழைக்க வேண்டும். ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில், கையில் கயிறு, நெற்றியில் பொட்டு வைக்க அனுமதிக்க கூடாது. 


 நீதிபதி சந்துரு கமிட்டி பரிந்துரைகள் இவை. இவற்றை அரசு அமல்படுத்தினால் மாற்றங்கள் வரும்.



No comments:

Post a Comment

Post Top Ad