THIRAN - காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் - சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு - வழிகாட்டுதல்கள் & பரிந்துரைகள் - Asiriyar.Net

Tuesday, October 14, 2025

THIRAN - காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் - சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு - வழிகாட்டுதல்கள் & பரிந்துரைகள்

 




அன்பார்ந்த ஆசிரியர்களே,

THIRAN இயக்கம் - 2025

6 - 9 ஆம் வகுப்பு - THIRAN - சார்ந்த வழிகாட்டுதல்கள்.

தங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி!


உங்கள் கருத்துக்களையும் கள யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, THIRAN இயக்கம் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.


1.THIRAN மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை THIRAN மதிப்பெண் உள்ளீடு பகுதி மற்றும் வழக்கமாக காலாண்டுத்தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதி என இரண்டு பகுதிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டுமா?

இல்லை.

-

THIRAN - மாணவர்களின் காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு மட்டும் THIRAN மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் பதிவு செய்தால் போதும். இரண்டு வேறு இடங்களில் பதிவிட வேண்டாம்.



2.THIRAN மதிப்பெண்களின்மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு அடிப்படையில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களுடன் தரவரிசை (Rank) கணக்கிட வேண்டுமா?


இல்லை. THIRAN - மாணவர்கள் எழுதிய வினாத்தாள் வேறு, மற்ற மாணவர்கள் எழுதிய வினாத்தாள் வேறு என்பதனால் மாணவர்களின் மதிப்பெண்களையும் இணைத்து தரவரிசை (Rank) கணக்கிட வேண்டாம்.


மாறாக, THIRAN - மதிப்பெண் உள்ளீடு 10.10.2025 உடன் முடிவடைகிறது. அதன் பின்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்களை கொண்ட Report Card ஐ பதிவிறக்கம் செய்ய இயலும். பதிவிறக்கம் செய்த Report Card ஐ THIRAN மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறையில் வழங்கும் Progress Report Card யும் வழங்கவும்.


3. THIRAN மாணவர்கள் காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பாட வாரியாக "அடிப்படை கற்றல் விளைவு(BLO - Basic Learning Outcome)" அடைந்தார்களா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

ஒவ்வொரு பாடத்திலும் 70% மேல் பெற்ற மாணவர்கள் அந்த பாடத்தில் "அடிப்படை கற்றல் விளைவு (BLO Basic Learning Outcome)" அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.


• 6 மற்றும் 7 ஆம் வகுப்பில் மதிப்பெண்களுக்கு 42 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும்


• 8 மற்றும் 9 ஆம் வகுப்பில் மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்க்கும் "அடிப்படை கற்றல் விளைவு (BLO Basic Learning Outcome)" அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.


BLO தேர்ச்சி பெற்ற வழிகாட்டுதல்கள்:

பாட வாரியாக "அடிப்படை கற்றல் விளைவு(BLO - Basic Learning Outcome)" அடைந்த மாணவர்கள் (கேள்வி 3- இல் உள்ள படி), இந்தப் பருவம் முதல் வழக்கமான பாடங்களை தொடரலாம்.


• 03.07.2025 அன்று - அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில் (THIRAN - Circular) குறிப்பிட்டுள்ள பகுதி 2 இன்றியமையா கற்றல் விளைவுகள் (Critical Learning Outcome) வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும்.


வாரத்திற்கு ஒரு பாடவேளை என தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு ஒரு பாடவேளையில் THIRAN (CLO) வகுப்புகள் நடத்த வேண்டும்.


• THIRAN மாணவர்களுக்கு வழக்கம்போல் தொடர்ந்து மாதாந்திர மதிப்பீடு நடத்தப்படும்.


Report Card:

THIRAN - மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு, மாணவர்களின் Report Card - ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். இது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) மற்றும் காணொளி விரைவில் பகிரப்படும்.

திறன் இயக்கத்தை சிறப்பாக நடத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த

நன்றி!


Dear team,


The THIRAN September Assessment Completion and Performance Reports are now available in your login. Please check them.


The last date for mark entry has been extended to 13.10.2025.


Kindly inform the schools that have not completed the mark entry to finish it soon.


Thank you.




No comments:

Post a Comment

Post Top Ad