அரசு ஊழியர், ஆசிரியர் அகவிலைப்படி உயர்வு கோரி அக். 29ல் போராட்டம் - Asiriyar.Net

Saturday, October 25, 2025

அரசு ஊழியர், ஆசிரியர் அகவிலைப்படி உயர்வு கோரி அக். 29ல் போராட்டம்

 



அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி அக்., 29 ல் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 ல் இருந்து 58 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்த சில நாட்களிலேயே மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவையுடன் வழங்கி விடுவர். ஆனால் ஜூலையில் அகவிலைப்படி உயர்வை அறிவித்து, 3 மாதங்கள் முடிவுற்ற நிலையில் இது வரை வழங்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


அகவிலைப்படி உயர்வு தொகை நிலுவையுடன் உடனே விடுவிக்க வேண்டும். தனியார் பல்கலை திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி அக்.29ல் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தமுடிவுசெய்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி செல்வகுமார் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கே இன்னும் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. அதன்பின் தான் ஆவின், மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட வாரிய ஊழியர்களுக்கு அரசு வழங்கும். அனைத்தும் தாமதமாவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.




No comments:

Post a Comment

Post Top Ad