தீபாவளி அன்று அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை முடிக்க வேண்டும். ஜெயின் மதத்தில் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் நம் தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது அவர் கிருஷ்ணரிடம் கோரிய வரத்தின் படி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று எண்ணெய்க் குளியல் முக்கிய பங்காற்றுகிறது. அன்றைய தினம் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கையும், நல்லெண்ணையில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதால் எண்ணெய்க் குளியலை அன்று கங்கா ஸ்நானம் என அழைக்கின்றனர். தீபாவளி அன்று அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை முடிக்க வேண்டும்.அதனால் முதல் நாளே பூஜை இடத்தை சுத்தம் செய்து மாக்கோலமிட வேண்டும்.
தீபாவளி புதுத்துணிகளை சாமி படத்தின் முன்பு ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். அத்துடன் தீபாவளிக்காக செய்துள்ள இனிப்பு, பலகாரம் போன்றவற்றையும் சிறிது சிறிது வைக்க வேண்டும். வீட்டின் தலைவி முதலில் எழுந்து அக்கால முறைப்படி வெந்நீர் அடுப்பை ஏற்றி விட்டு அல்லது இக்கால முறைப்படி ஹீட்டரை ஆன் செய்து விட்டு வாசலில் கோலமிட்டு சாமி விளக்கேற்றிய பின் அனைவரையும் எழுப்ப வேண்டும். பிறகு எண்ணெய்க் குளியல் முடிந்ததும் அவரவர் புத்தாடைகளுக்கு சந்தனம் தடவிய பின் அதை அணிந்துக் கொண்டு கடவுளையும், பெரியவர்களையும் நமஸ்கரித்து ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
உடனே குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்குவார்கள். காலை 6 மணிக்குள் காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி பெரும்பாலான வீடுகளில் தீபாவளி அன்று இட்லி செய்வது வழக்கம். மாமிசம் சாப்பிடுபவர்கள் இட்லிக்கு சைட் டிஷ் ஆக காலையிலேயே ஏதாவது அசைவ உணவை சமைப்பது நல்லது. மதியம் அவரவர் வீட்டு வழக்கப்படி விருந்து நடைபெறும். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு நமது வீட்டு இனிப்பு- பலகாரம் அளிப்பதும், அவர்கள் நமக்கு அளிப்பதும் வழக்கமான ஒன்று. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் மும்முரத்தில் காலை உணவை தவிர்க்கலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தி உணவு அளிக்க வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது மிகவும் நல்லதாகும். மேலே குறிப்பிட்டது நமது பாரம்பரிய தீபாவளி வழக்கம்.
தற்போது காலத்திற்கேற்ப பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் புத்தாடை, எண்ணெய் குளியல், இனிப்பு, பலகாரம் மற்றும் பட்டாசு வெடிப்பது என்றும் மாறாத ஒன்று. ஜெயின் மதத்தினரின் தீபாவளி ஜெயின் மதத்தில் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இது தற்போதைய அண்ட யுகத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்ததனைக் குறிக்கிறது.
இது இந்துக்களின் தீபாவளி பண்டிகையான அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களுக்கு அந்த ஆண்டின் முடிவையும், அவர்களின் 24-வது தீர்த்தங்கர மகாவீரரின் நினைவு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தலைத்தீபாவளி தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன. சிங்கப்பூரில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தீபாவளி என அழைக்கப்படும் தீப ஒளித்திருநாள் என்பது அனைத்து தரப்பினரால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பவுத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது.