உதவிப் பேராசிரியர் பணி - Experience Certificate பதிவேற்றம் செய்தல் - TRB அறிவிக்கை - Asiriyar.Net

Monday, October 27, 2025

உதவிப் பேராசிரியர் பணி - Experience Certificate பதிவேற்றம் செய்தல் - TRB அறிவிக்கை

 




அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு Annexure-IV, Annexure-V, Annexure-VI அனுபவச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் பணியனுபவச் சான்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் - பணியனுபவச் சான்று பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள, விண்ணப்பிக்கும் நிலையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பணியனுபவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு கல்லூரிக் கல்வி ஆணையரின் தெளிவுரையின்படி கீழ்க்கண்டவாறு பிற்சேர்க்கை (Addendum) வெளியிடப்படுகிறது


1. பணியனுபவச் சான்று பதிவேற்றம் (Experience Certificate) அக்டோபர் 16, 2025 தேதியிட்ட அறிவிக்கை எண் 04/2025 (Annexure-IV)இல் உள்ள பணியனுபவச் சான்றிதழை உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்று, கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் (தி(ம)வ) ஒப்புதலுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட Annexure-IVஇல் "Certificate approved by Joint Director (P&D), Directorate of Collegiate Education, Chennai" என்ற வாக்கியத்தை நீக்கி, புதிய Annexure-IV, Annexure-V மற்றும் Annexure-VI.இல் பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


Annexure-IV: அரசு / அரசு உதவிபெறும் / தனியார் கலை மற்றும் அறிவியல் / மருத்துவம் / பொறியியல் / கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்


Annexure-V: இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்


Annexure-VI: வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்கள்


மேற்குறிப்பிடப்பட்ட Annexure-IV, Annexure-V மற்றும் Annexure-VI.இல் கொடுக்கப்பட்ட பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அவை தொடர்பான அறிவுரைகளின்படி (Instructions) உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்ற பின்னர் பதிவேற்றம் செய்யுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Click Here to Download - TRB - Teaching Experience Certificate - Upload Institutions - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad