ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - என்ன தகுதி? முழு விவரம் இதோ! - Asiriyar.Net

Saturday, October 25, 2025

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - என்ன தகுதி? முழு விவரம் இதோ!

 



ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2025-2026 கல்வியாண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குவது குறித்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய ஆசிரியர் நல நிதியம் சார்பாக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:


அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) தொழிற்கல்வி பட்டப்படிப்பு (UG course) பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tuition Fees) அல்லது ரூ.50,000/- இதில் எது குறைவோ, அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு (Diploma course) பயில மற்றும் தொழிற்பட்டயப் படிப்பு(Diploma couma பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tuition Fees) அல்லது ரூ.15,000/- இதில் எது குறைவோ அத்தொகை தேசிய ஆசிரியர் நிதியில் கைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து வழங்கப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.


யாரெல்லாம், எப்போது விண்ணப்பிக்கலாம்?


மேலும் படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலக அளவில் பெற்று பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை 10.11.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


என்னென்ன விதிகள்?

விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் (மகன்/மகள்) அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியிலிருந்து இறந்த ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு ஒரு முறை மட்டும் கல்வி கட்டணத் தொகை வழங்கப்படும்.


அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் தொழிற்கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்ட படிப்பு MBBS, BDS, B.VSC, BE, B.Sc (Agri), B.Sc (Nursing), Bachelor of Law and Three years Diploma Course) பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத் தொகை வழங்கப்படும்.


மனுவில் உள்ள அனைத்து கலங்களும் முழுமையான அளவில் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (பணிபுரியும் பள்ளி, முகவரி பின் கோடுடன் இருத்தல் வேண்டும்)


பெற்றோர்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.7,20,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.


படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று தொகுத்து இவ்வியக்ககத்திற்கு 10.11.2025-அனுப்பி வைக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது.


தொழிற்கல்வி படிப்பில் கடைசியாக தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விபரங்களை கண்டிப்பாக விண்ணப்பத்தில் உள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


தந்தை அல்லது தாய் ஆசிரியராக பணிபுரிந்தால் / பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இறந்து போன ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இப்படிப்புதவித் தொகை பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.


ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.


சார்ந்த மாணவ/ மாணவியரின் வங்கி கணக்கு எண் சார்ந்த விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் பெற்று இணைக்கவேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து அனுப்பும் பட்சத்தில் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் இணைத்திருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here to Download - DSE - Higher Education Scholarship For Teachers Children - Regarding - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad