மகப்பேறு கால விடுப்பில், விடுமுறை முழுவதும் HRA வழங்கப்படும்: மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம்..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 25, 2021

மகப்பேறு கால விடுப்பில், விடுமுறை முழுவதும் HRA வழங்கப்படும்: மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம்..!

 




மகப்பேறு கால விடுப்பில் சென்றால், 6 மாதங்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படும் என மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி வழங்கும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த 22.9.2021 அன்று தேதி தினகரன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் அரசாணை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம் அளித்துள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் (Instruction) 4(b)ல் “ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது (மகப்பேறு விடுப்பு உட்பட) ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதியுடையவர் ஆவர்.” இந்நிலையில் அரசாணை (நிலை) எண்.89, மனிதவள மேலாண்மைத் துறை, நாள்.9.9.2021ன்படி அடிப்படை விதி 101(a)ன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு ஒரு சிறப்பு சலுகை என்பதால் மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும். அவ்வாறு அனுமதி அளிக்க, அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் (Instruction) 4(b)ல் “ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதியுடையவர் ஆவர்.”


என்றிருந்த நிலையில் “மகப்பேறு விடுப்பு உட்பட” என்ற வார்த்தை அவ்விதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருத்தத்தின் மூலம் மகப்பேறு விடுப்பின்போது பெண் அரசு ஊழியர்கள் அவ்விடுப்புக்காலம் முழுமைக்கும் தடையின்று வீட்டுவாடகைப்படி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த அரசாணை வெளியாகியது.



Post Top Ad