தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு குழு காணொளி வழிக் கூட்டம்
நாள்: 05.10.2025 மாலை 6 மணி
அளவில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் சுழல்முறை தலைவர் திரு.இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது
*டிட்டோஜாக் சார்பில் வருகின்ற 8 .10 .2025 அன்று மாவட்டத் தலைநகரில் மத்திய அரசு அலுவலகம் முன்பாக TET தேர்வு சார்ந்து பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசின்*
*கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது ஜாக்டோ ஜியோ சார்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு 08.10.2025 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நடைபெறுவதாலும் கரூரில் நடைபெற்ற சம்பவ நெரிசலில் 41 பேர் மறைவால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினைக் கருத்தில் கொண்டும் ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் TET வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தமைக்காக டிட்டோஜாக் பேரமைப்பு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 09.10.2025 அன்று சென்னையில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்திப்பது,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பு மிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் உறுதியளித்தபடி டெல்லி சென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், NCTE உயர் அலுவலர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இரங்கல் தீர்மானம்
பள்ளி மாணவர்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
இன்னுயிர் இழந்து இறைவனடி சேர்ந்தோருக்கு டிட்டோஜாக் பேரமைப்பு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது. தங்கள் உற்ற உறவுகளை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தகவல் :
திரு. இரா.தாஸ்
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்
சுழல்முறை கூட்டத் தலைவர்
பொதுச்செயலாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment