தமிழ்நாட்டில், 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்விக்குள் நுழைய பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. குறிப்பாக, முதல் தலைமுறை பட்டதாரி எனத் தங்களை உறுதி செய்யும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இது சாதிப் பாகுபாடு இல்லாமல் மற்றும் குடும்ப வருமானம் பொருட்படுத்தப்படாமல் வழங்கப்படுகிறது.
சலுகைகள் பெறும் கல்லூரிகள்:
- அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்
- மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்
- வேளாண்மை மற்றும் சட்டக் கல்லூரிகள்
இந்த கல்விக் கட்டணச் சலுகை அரசே நேரடியாக செலுத்தும். இதில் கவுன்சலிங் மூலம் சேரும் மாணவர்களே தகுதியுடையவர்கள். கூடுதலாக, சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் செல்ஃப் சப்போர்ட்டிங் படிப்புகளுக்காக AICTE வழங்கும் சலுகை ஏற்கனவே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 5% மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பெற்றோர் வருமானம் வருடத்திற்கு ரூ.4.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
Later Entry (இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை):
ஒற்றைச்சாளர முறையில் முதலாம் ஆண்டு அல்லாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கும் சலுகை பொருந்தும். இலங்கைத் தமிழ் அகதிகளும் இதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
முக்கிய சான்றிதழ்கள் பெறும் முறை:
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்:
- பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- வயது வரம்பு இல்லை.
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் (இரட்டையர்கள் என்றால் இருவருக்கும்).
- அரசு வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ்:
- மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- இடஒதுக்கீட்டிற்குத் தேவையான முக்கிய ஆவணம்.
முன்னாள் ராணுவ வாரிசு சான்றிதழ்:
- தமிழ்நாடு முன்னாள் ராணுவ நலவாரிய அலுவலகத்தில் பெறலாம்.
- உயர்கல்வியில் தனி இடஒதுக்கீட்டுக்கு பயன்படும்.
விளையாட்டு சான்றிதழ்:
- மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தால் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- தனி ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.
- பிளஸ் டூ மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது; ஆனால் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அவசியம்.
இந்த சான்றிதழ்கள் மற்றும் சலுகைகள் மாணவர்கள் உயர்கல்விக்குள் நுழைய ஒரு முக்கிய வாயிலாக இருக்கின்றன. உங்கள் சமூகத்தில் உள்ள மாணவர்களும் இவற்றைப் பற்றித் தெரிந்து பயன்பெற, தயவுசெய்து இந்த தகவல்களைப் பகிருங்கள்.
No comments:
Post a Comment