21 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம் - Asiriyar.Net

Sunday, December 1, 2024

21 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்

 



திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர் மற்றும் கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து நீடிக்கும்.


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad