156 பள்ளிகளுக்கு - 9 நாட்கள் விடுமுறை - Asiriyar.Net

Saturday, December 7, 2024

156 பள்ளிகளுக்கு - 9 நாட்கள் விடுமுறை

 



திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.


மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் பக்தர்களின் வசிதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.


இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தீபத்திருவிழா பாதுகாப்பிற்கு வருகைதரும் காவலர்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் தங்கவிருப்பதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad