Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, October 7, 2024

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்? - RTI தகவல்

 



சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதன்படி, தமிழகத்திற்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.


நிதியை விரைந்து விடுவிக்கக்கோரி, ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடிதம் எழுதினார். பின்னர் நேரிலும் சந்தித்து நிதி கோரிய நிலையில், மத்திய அரசு இன்னும் நிதியை விடுவிக்கவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை, தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால் தான், சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர்.







No comments:

Post a Comment

LightBlog