''பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தனித்திறனுடன் விளக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக் கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு, 'கனவு ஆசிரியர்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து, 32 ஆசிரியர்கள்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 22 ஆசிரியர்கள் என, 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்களை 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற வைத்து சிறப்பிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு வகையில் இவர்கள் தேர்வாகினர். இவர்கள் உட்பட, 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment