ஆங்கில ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் குழு - எதற்காக தெரியுமா? - Asiriyar.Net

Sunday, October 20, 2024

ஆங்கில ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் குழு - எதற்காக தெரியுமா?

 



தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலக் கற்பித்தல் திறனை மேம்படுத்த, புதிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வர். ஆர்வமில்லாத ஆசிரியர்கள் மீண்டும் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி,  நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை அறிமுகத்தியது. பின்னர் மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. 


இந்நிலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என வகைப்படுத்தி அவர்களை, 2 கட்செவி அஞ்சல் (WhatsApp) குழுவில் இணைத்து அவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு உதவ மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad