தேர்வு நிலை நிலுவை ஊதியம் வழங்கிட கையூட்டு கேட்டதாக ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளர் மீதான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புகார் - பத்திரிக்கை செய்தி வெளியீடு - நேரடி விசாரணை மேற்கொள்ளல் - பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள், நாள் : 23-10-2024.
பொள்ளாச்சி கல்வி மாவட்டம், ஆனைமலை ஒன்றியம், வாழைக்கொம்பு. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமுனீஸ்வரன் என்பவருக்கு தேர்வுநிலை நிலுவை ஊதியம் வழங்கிட அலுவலக பிரிவு உதவியாளர் ரூ. 3000/- கையூட்டு கேட்டதாக வெளியான புலன் ஆடியோ குறித்து சார்ந்த பணியாளர்களிடம் விளக்கம் எழுத்து மூலமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மூலமாக திரு-முனீஸ்வரன் என்பவர் தெரிவித்த புகார் மனுவின் மீது இவ்வலுவலக ந.க.எண்.3454/அ/ 2024 நாள் 17.10.2024 இன் படி ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலர் II கண்காணிப்பாளர். பிரிவு உதவியாளர் மற்றும் புகார் தெரிவித்த ஆசிரியரிடம் உரிய விளக்கம் கோரி வரைவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,
இதனைத் தொடர்ந்து 21.10.2024 தினமலர் நாளிதழிலும் 22.10.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதலும் செய்தியாக வெளிவந்துள்ளது. மேற்கண்ட புகார்கள் குறித்து கீழ்க்கண்ட தேதியில் நேரடி விசாரணை நடைபெற உள்ளது.
இலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்.
ReplyDelete