அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன், அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவுக்கு 'பயோமெட்ரிக்' முறை பின்பற்றப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபின்னும் 'பயோமெட்ரிக்' பின்பற்றப்படவில்லை.
தீபாவளி முடிந்து, நவ., 1 முதல் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவுக்கு, 'பயோமெட்ரிக்' முறை கொண்டு வர தேவையான செயல்பாடுகளை பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது.
பள்ளி கல்வி இயக்ககம் மூலம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய தகவலில், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்பட்ட பள்ளிகளில், கருவிகளின் நிலை என்ன, செயல்பாட்டில் உள்ளதா, புதிதாக பணியில் இணைந்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரேனும் சேர்க்கப்படாமல் உள்ளார்களா உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment