வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நாட்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.
தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09,10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-
09.11.2024 சனிக்கிழமை
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
23.11.2024 சனிக்கிழமை
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்தல்கள் - 01.01.2025ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கத் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்
Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activities - Special Campaign Dates - Commission's Approval -Communicated - Regarding
No comments:
Post a Comment