தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் அவ்வப்போது பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், வாலஜாபாத், உத்தரிமேரூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
அன்பில் மகேஷ் உணவு சாப்பிட்டபோது திடீரென்று ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அதனால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் இன்று காலை (அக்.2) வீடு திரும்புவார் என்றும் தகவல் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment