தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 2020 மே மாதம் 59 ஆகவும்; அடுத்த ஆண்டில், 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளாக, ஓய்வு பெற வேண்டியவர்கள், தங்கள் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 'ஏற்கனவே ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.
பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகிறது' என, எதிர்ப்பு எழுந்தது. ஓய்வு வயது உயர்த்தும் எண்ணம் இல்லை என, அரசு அறிவித்தது. அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்த பரிசீலனையா - சங்கங்கள் கடும் கொந்தளிப்பு
No comments:
Post a Comment