அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் - CEO சுற்றறிக்கை - Asiriyar.Net

Tuesday, June 11, 2024

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் - CEO சுற்றறிக்கை

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைப்படி , பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் நகராட்சி / அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 


தற்போது 2024-2025 - ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள எவ்வித அறிவிப்பும் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்படாததால் தற்காலிக ஆசிரியர்களை ( கடந்த ஆண்டுகளில் பணியாற்றியவர்கள் மற்றும் புதிய ஆசிரியர்கள் எவரும் ) நியமனம் செய்ய வேண்டாம் என அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது



No comments:

Post a Comment

Post Top Ad