சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது, பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெற வருமான உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட 58 வகையான அறிவிப்புகள் - இன்றைய சட்டப் பேரவையில்!
சென்னையில், பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சுயதொழில் உருவாக்கும் வகையில், 200 இளஞ் சிவப்பு ஆட்டோக்களை (Pink Autos) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில், சமூக நலத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல் படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்ள், கைவிடப்பட்டபெண்கள், கணவனால் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா 50,000 ரூபாய் வீதம் 1.00 கோடி ரூபாய் மானியம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும்.
6 அரசு சேவை இல்லங்கள் மற்றும் 27 அன்னை சத்யா குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு 1.90 கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 12,567 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 தொடர்பாக விழிப்புணர்வு பலகைகள் 62.83 இலட்சம் ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு 9.00 கோடி செலவினத்தில் முட்டை உரிப்பான் (egg peeler) இயந்திரங்கள் வழங்கப்படும்.
முதியோர் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக வாழ, மாநில அரசு மானியம் பெறும் 23 முதியோர் இல்லங்கள் மற்றும் 44 ஒருங்கிணைந்த வளாகங்களில் உள்ள 2,020 முதியோர் பயனடையும் வகையில் 40.20 இலட்சம் ரூபாய் மதிப்பில், யோகா, மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படும்.
ஆதரவற்ற முதியோர் நலனுக்காக 7 சுற்றுலா தலங்களில் உள்ள முதியோர் இல்லங்களில், சிறப்பு தங்கும் வசதிகள் 40.00 இலட்சம் தருபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறை, எளிய ஆளுமை (Simple Governance) திட்டம் மூலம் எளிதாக்கப்படும்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 54,449 குழந்தைகள் மையங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5,590 குழந்தைகள் மையங்களை 55.9 0 கோடி ரூபாய் செலவினத்தில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வரும் 6, 5 2 7 குழந்தைகள் மையங்களில் 11.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகளை கண்காணிக்க 34.50 கோடி ரூபாய் செலவினத்தில் 29, 236 அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பழைய திறன் கைப்பேசிகளுக்கு பதிலாக புதிய திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உயரம் ற்றும் எடையை அளவிடுவதற்கு குழந்தைகள் வழங்கப்பட்டுள்ள மையங்களுக்கு நான்கு வகையான வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் 14.18 கோடி ரூபாய் செலவினத்தில் புதியதாக மாற்றி வழங்கப்படும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு சத்தான உணவு ஊட்டுதல் முக்கியத்துவம் குறித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 50.00 இலட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பயிலரங்கங்கள் (Workshops) நடத்தப்படும்
ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் குறித்து 3, 800 வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட 47.50 இலட்சம் ரூபாய் செலவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்
அரசு நிறுவனங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பினை கண்காணிக்க குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குநரகத்தில் ஒருங்கிணைந்த சிறப்பு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்
திருச்சிராப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு இல்லச் சிறார்கள் தங்குமிடம், தொழில் பயிற்சி கூடம் ஆற்றுப்படுத்துநர் அறை, விளையாட்டு கண்காணிப்பாளர் மைதானம் நூலகம், மற்றும் உதவி ஆகியவற்றை உள்ளடக்கிய குடியிருப்ய் கண்காணிப்பாளர் கட்டடங்கள் 12.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை, சேலம், கடலூர், திருநெல்வேலி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 அரசு கூர்நோக்கு இல்லக் கட்டடங்களில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை சேலம் கடலூர் திருநெல்வேலி மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஆறு அரசு கூர்நோக்கு இல்ல கட்டடங்களில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகள் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு கூடுதல் துயில் கூடங்கள் போதை தடுப்பு மையம் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
அரசு கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள சிறார்களை ஆக்கப்பூர்வமான வகையில் ஈடுபடுத்தவும் அவர்களை மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் நல்வழிப்படுத்தவும் அடிப்படை பயிற்சி (basic training module) 2.50 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்
அரசு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவின் அளவு நடப்பு நிதியாண்டு முதல் 2.30 கோடி ரூபாய் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கருதப்பட்டு சென்னை அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதை திட்டம் 40 லட்சம் ரூபாய் செலவினத்தில் செயல்படுத்தப்படும்
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் அமைய உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லா வளாகத்தில் கண்காணிப்பாளர் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
மதுரை அரசிடர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில் கூடங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
சேலம் மதுரை திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பார்வையாளர் பெற்றோர் நேர்காணல் அறைகள் மற்றும் வாயிற் காவலர்களின் பயன்பாட்டிற்கு தனியாக கழிவறை வசதிகளுடன் கூடிய அறை 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் வாயிற் காவலர்களின் பயன்பாட்டிற்காக கழிவறை வசதிகளுடன் கூடிய அறை 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
அரசு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களின் கட்டடங்களை பராமரிப்பதற்கான சிறப்பு மானியம் மூன்று கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்
இதையும் படிங்க: 2024 - 25 நிதியாண்டில் ரூ.1650 கோடி வருவாய் இலக்கு - வீட்டு வசதி வாரியம்
சென்னை திருச்சிராப்பள்ளி ராமநாதபுரம் மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வு காண இல்லங்கள் 2.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்கள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
அரசு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு கட்டடங்களை பராமரிப்பதற்கான சிறப்பு மானியம் 3.00 கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.
Click Here to Download - 3 Years Achievements - Pdf
No comments:
Post a Comment