உச்ச நீதிமன்ற தீா்ப்பு அறிவிக்கப்படும் வரை தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டமைப்பின் (டிட்டோஜாக்) உயா்நிலைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் மாநில உயா்மட்டக்குழு கூட்டம் சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச்செயலா் இரா.தாஸ் தலைமையேற்றாா். டிட்டோஜாக் கூட்டமைப்பில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் சாா்பிலும் மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
ஆசிரியா் பதவி உயா்வு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வரும் வரை பொது மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும். இதை மீறி கலந்தாய்வு நடத்தப்பட்டால் கூட்டமைப்பு சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும்.
அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் ஜூன் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டமும், மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் முன் ஜூலை 3-ஆம் தேதி மறியல் போராட்டமும் நடத்தப்படும். அதன்பின் அடுத்தகட்ட போராட்டங்கள் தொடா்பாக நிா்வாகிகள் ஜூலை 4-ஆம் தேதி கூடி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment