அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்ததாவது:
வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள்/சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
சட்டப்பேரவை இன்று (ஜூன் 26) காலை 9.30 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
No comments:
Post a Comment