திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பின்னர் படிப்படியாக தரம் குறையத் தொடங்கியது.
கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா என்பவர் பொறுப்பேற்றார். இவர் 8 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியர் பணியில் உள்ளார்.
கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சார்பில் எல்.இ.டி. டி.வி. ஒன்று இந்த பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டது.
மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் டேபிள், சேர், பீரோ, கரும்பலகை மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் போன்றவையும் வாங்கி கொடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment