தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2024-25ல் ஆண்டிற்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - திருத்திய காலஅட்டவணை வெளியிடுதல் - சார்பு
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே-2024 மாதம் தொடங்கி, நடத்திட அனுமதிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்விற்கான உத்தேச காலஅட்டவணை பார்வை-2ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பப்பட்டது.
அதன் பின்னர் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து வந்ததாலும், பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மற்றும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று. பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை 25.05.2024 வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
இணைப்பு: கலந்தாய்வு காலஅட்டவணை
No comments:
Post a Comment