10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் விண்ணப்பம் - கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு - ஐகோர்ட் கேள்வி - Asiriyar.Net

Thursday, June 27, 2024

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் விண்ணப்பம் - கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு - ஐகோர்ட் கேள்வி

 




மறுகூட்டல் விண்ணப்பம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 


மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் தேர்வுக் கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த வளன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவின்போது மறுகூட்டலுக்கு ரூ.505 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரிக்கும்பட்சத்தில் விண்ணப்பக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. 


வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு?. அனைத்து மாணவர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள எண்ணினால் நிலைமை என்னவாகும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த வளன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



No comments:

Post a Comment

Post Top Ad