19, 260 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு - Press Release - Pdf - Asiriyar.Net

Tuesday, June 25, 2024

19, 260 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு - Press Release - Pdf

 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன்கீழ் பேசியதாவது:


வரும் ஜனவரி 2026ஆம் ஆண்டுக்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.


அதாவது வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும்.


Click Here to Download - CHIEF MINISTER - PRESS RELEASE - PdfPost Top Ad