கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் (51) மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை நிறைவுற்று மீண்டும் பள்ளிகள் செயல்பட துவங்கின. இந்நிலையில் முதல் நாள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை மறுமண அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்தனர். பள்ளி ஆசிரியரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் குறித்து கமுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment