வினாத்தாள்களுக்காக ஆசிரியர்கள் அலைக்கழிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 11, 2023

வினாத்தாள்களுக்காக ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

 

இரண்டாம் பருவ பொதுவினாத்தாள் நடுநிலைப் பள்ளிகளில் அச்சிட்டு வாங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. வீண் அலைச்சல், காலவிரயம், அலைக்கழிப்பு செய்வதாகஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு டிச.13 முதல் துவங்கவுள்ளது. இந்த பருவத்தேர்வுக்கானவினாத்தாள் https://exam.tnschools.gov.in என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிகளின் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், எனதொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


தலைமையாசிரியர்கள் வினாத்தாள்களை அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில்அச்சிட வேண்டும். தனியார் இணையதள மையங்களில் பதிவிறக்கம்செய்யக்கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் பள்ளிகளில் உள்ளமாணவர்களில் அரும்பு, மொட்டு, மலர் என்ற நிலையில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.


வினாத்தாள்களை வேறு பள்ளிகளுக்கோ, அலை பேசி மூலம் குழுவிலோ தலைமையாசிரியர்கள் பகிர கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளிக்கு செல்வதற்கு குறைந்த பட்சம்5 முதல் 10 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும்.


நடுநிலைப்பள்ளியில் அச்சிடும்இயந்திரம் சரியில்லை என்றால் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரிடும். இப்படி நடைமுறையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது. பொதுவினாத்தாள் என முடிவு செய்த தொடக்க கல்வி இயக்கம் வினாத்தாள்களை மொத்தமாக அச்சிட்டு வழங்கினால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.


இதற்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Post Top Ad