முதல் பருவ மதிப்பீடு முடிவுகள் - அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது - TN EE Mission அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, October 11, 2023

முதல் பருவ மதிப்பீடு முடிவுகள் - அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது - TN EE Mission அறிவிப்பு

 



முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு முடிவுகள் சார்ந்த அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது.  தொகுத்தறி மதிப்பீடு CCE மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர் தரநிலை அறிக்கையை செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 மதிப்பெண் பட்டியலில் தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் காலியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆன்லைனில் மேற்கொண்ட தொகுத்தறி மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். 


வளரறி மதிப்பீடு அ விற்கான மதிப்பெண்கள் செயலியில் பதிவேற்றம் செய்திருக்கும் பட்சத்தில் அது மதிப்பெண் பட்டியலில் பிரதிபலித்திருக்கும். ஒரு வேளை மதிப்பெண்களை பதிவு செய்யாமல் இருந்தால் நீங்கள் மதிப்பெண் பட்டியலில் கைப்பட எழுதி மொத்த மதிப்பெண்கள் தரநிலை ஆகியவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். 


மாணவர் தரநிலை அறிக்கையில் பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலைப் புள்ளிகளை வழங்கி அதற்கேற்ற தர நிலையையும் பதிவு செய்து கொள்ளலாம் .நன்றி.


TN EE Mission





No comments:

Post a Comment

Post Top Ad