ஆசிரியர்களின் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷின் அளித்த பதில் - Asiriyar.Net

Monday, October 2, 2023

ஆசிரியர்களின் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷின் அளித்த பதில்

 



நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். 


சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள அமிட் கடல்சார் பல்கலைகழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "கை கொடுப்போம் கிராமப்புற நூலகங்களுக்கு" என்ற தலைப்பில் சென்னைவாழ் மக்களிடம் வீடு, வீடாகச் சென்று அவர்கள் படித்து முடித்த புத்தகங்களை பல்கலைகழக மாணவ, மாணவிகள் ஒரே நாளில் ஒரு இலட்சம் புத்தகங்களை சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று (அக். 2) நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது அவரிடம் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கேட்டபோது, "ஏற்கனவே மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பெர்சனல் செகரட்டரி மூலமாக பேசியிருக்கிறோம். 


முதலமைச்சர் இரண்டு முறை தொலைபேசியில் பேசி இருக்கிறார். அதற்கான காரணங்களை சொல்லி இருக்கிறோம். நம் தேர்தல் அறிக்கையில் கூறியதாக அவர்கள் கேட்கிறார்கள். நிதி சார்ந்து, நிதி சாராதது என்று பிரித்து அவர்களுக்கு எது முக்கியத்துவம் இப்போது குறிப்பாக ஒரு மூன்று விதமான அமைப்புகள் இந்த போராட்டத்தில், 'போராட்டம்' என்று சொல்வதைக் காட்டிலும் எங்களுடைய கவனத்தை இருக்கின்ற ஒரு நிகழ்வாக நாம் பார்க்கிறோம்.


Post Top Ad