அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் - இடைநிலைஆசிரியர்கள் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, October 2, 2023

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் - இடைநிலைஆசிரியர்கள் அறிவிப்பு

 சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். உங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து விரைவாக முடிவை நாங்கள் அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். 


சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்" என்று கூறினார்கள்.Post Top Ad