TNSED Administrator App - ஆசிரியர்களுக்கான அறிவுரை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 4, 2023

TNSED Administrator App - ஆசிரியர்களுக்கான அறிவுரை

 



அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பான வணக்கம்.


 *தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை  தலைமை ஆசிரிய பெருமக்களும் வகுப்பறையை பார்வையிடுதலை தனி ஆப் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவுரையின் அடிப்படையில் தற்போது புதியதாக TNSED ADMINISTRATOR APP உருவாக்கப்பட்டுள்ளது.*


 இதில் தலைமை ஆசிரியர்கள் வகுப்பறையை மேற்பார்வை இட்டு அதில் வரும் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாடப்பகுதி விளக்கப்படுதல், வகுப்பறை நிர்வாகம் என்ற இரண்டு தலைப்புகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வை இடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடப்பகுதி விளக்கப்படுதலில்


1. எந்த முறையில் மூலம் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது அல்லது ஆர்வமூட்டல் எவ்வழியில் நடந்தது.


 2.மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில்களை பெற்று அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டார்களா? 


3.எத்தனை சதவீதம் மாணவ மாணவியர் அப்பாடப் பகுதியில்  விளக்கத்தினை தெளிவாக தெரிந்து கொண்டனர். 


4.பயன்படுத்திய துணை கருவிகள் எவை?


5. அத்துணை கருவிகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டவை? .


6.மாணவர்கள் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார்களா?.


7. பாடப் பகுதியில் இடையே வீட்டில் செய்து வர என்ன செயல்பாடு கொடுக்கப்பட்டது?.


8. குழு செயல்பாடு நடைபெற்றதா?


9. கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் ?.


இவை அனைத்திற்கும் தலைமை ஆசிரியர் பதிலளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


*வகுப்பறை நிர்வாகம்.*


1.கற்றல் விளைவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு செயல்பாடு வழங்கப்பட்டதா?


2. கற்றல் விளைவுகளை அடையக்கூடிய வகையில் வகுப்பறை நிர்வாகம் என்பது இருந்ததா? கற்றல் விளைவுகளை அடைந்தவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டார்களா? என்பதனையும் பதில் அளிக்க வேண்டும்.


அனைத்து மாணவர்களின் வருகையை பதிவு செய்த பின் சில குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டுப்பாடம் நோட்டு திருத்தப்பட்டதா? திருத்தப்பட்டிருந்தால் எந்த தேதியில் திருத்தப்பட்டுள்ளது. என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் பார்க்கப்பட வேண்டிய பதிவேடுகள்.


1. நடத்தக்கூடிய பாடத்தின் பாடநோட்டு


2. வீட்டு பாட நோட்டு


3. கணிதத்தில்  வரைபடவியல்,கிராப்


4.சமூக அறிவியலில் 

வரைபடம்


5.ஓவிய நோட்டு


6. அறிவியல் ஆய்வகத்திற்கு சென்றார்களா? தேதி?


7. நூலகத்திற்கு சென்றார்களா? தேதி?


*இவற்றினை பார்வையிட்டு தகவல்களை பதிய வேண்டும். மேலும் தலைமை ஆசிரியரின் கருத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் ஆசிரியருடைய முன்னேற்ற அறிக்கையானது கிடைக்கப்பெறும். தேவையெனில் அதனை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது*


தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

 சிறப்பாக செயல்படுங்கள்.

 வாழ்த்துகள்.நன்றி மகிழ்ச்சி.


Post Top Ad