ITK கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ITK தன்னார்வலர்கள் விவரம் கோருதல் சார்ந்து இளம்பகவத் IAS அவர்களின் சுற்றறிக்கை
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு பணி!
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும்.
இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment